தனிமையில்-தெஹிவளை மிருகக்காட்சிசாலை விலங்குகள் !
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கூண்டுக்குள் தனியாக வாழும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 15 விலங்குகள் அவற்றின் கூண்டுகளில் தனியாகவும், 35 விலங்குகள் துணையின்றியும், இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த விலங்குகள் தனிமைப்படுத்தப்படுவது அந்த விலங்குகளின் ஆரோக்கியத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை