ஏமாற்றம் கண்ட இதயமோ!!
மாலைநேர
இலை அசைவை ரசிப்பதற்காய்
கருணையற்ற சூரியனிடம்
மன்றாடிக்கொண்டிருந்தேன்
அதுவோ
தன்போக்கில் சென்றுகொண்டிருந்தது
ஏமாற்றம் கண்ட இதயமோ
முட்களின் கூர் நுனியை
நலம் கேட்க முற்பட்டது
இரங்க மறுத்த
முட்கதிரும்
மனதினில் மீண்டும்
விரிசலை உண்டு பண்ணியது
இப்போது
நீண்டு செல்கிறது ஆசைகள்
மீண்டுமாய்
ஏமாற்றங்கள் மனதுக்குள்
பறுவகாலத்து இருளாக நிரவிக்கிடக்கிறது....
#பிரபாஅன்பு#
கருத்துகள் இல்லை