அரசாங்கத்தின் வருமானம் 25 சதவீதத்தால் அதிகரிப்பு!
அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக ஜனவரி மாதத்தில் அரசாங்கத்தின் வருமானம் 25 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
219 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதும், 274 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார். இதேவேளை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் 11 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் மதுவரித் திணைக்களத்தின் வருமானமும் கூட எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாகவும், அவர் கூறினார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம் 114 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், எனவே அரசாங்க வருமான அதிகரிப்பானது நாட்டுப் பிரஜைகளின் நலனை மேம்படுத்துமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
கருத்துகள் இல்லை