திமிங்கில வாந்தியுடன் 3 சந்தேகநபர்கள் கைது!
ரூ. 3 கோடிக்கும் அதிக பெறுமதியான திமிங்கிலத்தின் வாந்தியுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், மிதக்கும் தங்கம் என அழைக்கப்படுகின்ற, நாட்டில் விற்கவோ அல்லது வியாபாரம் செய்யவோ தடைசெய்யப்பட்டுள்ள, 4 கிலோ 500 கிராம் எண்ணெய்த் திமிங்கிலத்தின் (Sperm Whale) வாந்தி (Ambergris) எனத் தெரிவிக்கப்படும் பொருளுடன் மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் (06), தெவிநுவர மற்றும் நாகுலுகமுவ பிரதேசங்களில், விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட தற்போதைய சந்தைப் பெறுமதியினை கொண்ட Ambergris உடன் மிரிஸ்ஸ குற்றப் பிரிவு அதிகாரிகளால் இக்கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மொண்டேரோ ரக ஜீப் வண்டியில் பயணித்த 25-30 வயதுக்கும் இடைப்பட்ட நாகுலுகமுவ பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அழிந்து வரும் விலங்கினமான திமிங்கலங்களின் உடலில் இருந்து வெளியாகும் விந்தணுக்கள் மற்றும் வாந்தி என்பவற்றால் உருவாகும் இந்த Ambergris, நீண்ட கால நறுமணத்தை தருவதால் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பது உள்ளிட்ட விடயங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை