எங்கா மாகாண பழங்குடியின குழுவினருக்கு இடையில் மோதலில்55 பேர் பலி!
பப்புவா நியூ கினியின் வடக்கு மலைப்பகுதிகளில் இரண்டு பழங்குடியின குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சுமார் 55 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எங்கா மாகாணத்தில் இரு பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட குறித்த மோதலில் பழங்குடியின குழுவொன்றை சேர்ந்தவர்கள், அங்கு பதுங்கியிருந்ததாக கூறப்படும் மற்றுமொரு பழங்குடியினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் கண்டறியப்படவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் நில உரிமை தொடர்பாக நீண்ட காலமாக, சில பழங்குடியின குழுவினர்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்று வருவதாக அந்த நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை