95 வது வயதில் பல்கலைக்கழக பட்டம் வென்று டாக்டர்(Dr) விருதை சூடிக் கொண்டுள்ளார்!

 


தனது 95 வது வயதில் பல்கலைக்கழக பட்டம் வென்று டாக்டர்(Dr) விருதை சூடிக் கொண்டுள்ளார் இவர். 


இங்கிலாந்தின் கிங்ஸ்ரன் ( Kingston) பல்கலைக்கழகத்தில் இவர், நவீன ஐரோப்பிய தத்துவ துறையில் முற்போக்கு சிந்தனை ஆய்வில் தேர்ச்சி எழுதி,முதுகலைப் பட்டத்தை ( MA) தனதாக்கிக் கொண்டார் .


தென் கிழக்கு லண்டன் சரே ( Surrey)

பகுதியை சேர்ந்த "டேவிட் மாஜாட் " எனு‌ம் ஓய்வு பெற்ற உளவியல் துறை ஆலோசகரே இவ் வயதிலும் சாதனை நிகழ்த்தியவராவார்.


மேற்குலகின் நவீன தத்துவ சிந்தனை தொடர்பான படிப்பில் தனது கவனத்தை செலுத்தி அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். 


65 வருட திருமண வாழ்வின் நிறைவில் அவரது மனைவி இறந்த பின்னரும், பிரிவுத் துயரை தனக்குள் உள் வாங்காது, படிக்கும் ஆற்றல் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டேன் என்கிறார் .


இந்த பல்கலைக்கழக பட்டத்தை அடுத்து 

இன்னொரு கல்வித் துறை படிப்பை எனது 102 வயதுக்குள் முடிக்க உள்ளேன் என்றார் உறுதியாக. 


பட்டமளிப்பு விழாவில் அவரது மகன் மற்றும் மருமகனுடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் அவர். 


                        

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.