விமானம் மூலம் அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானிய ஆதரவு தளபதி பலி!

 


ஈராக் தலைநகர் பக்தாதில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரான் ஆதரவு போராட்டக் குழு ஒன்றின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.


கதைப் அப்துல்லா குழுவின் தலைவர் மற்றும் அவரது இரு காவலர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றே கடந்த புதன்கிழமை (07) இரவு இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர். கதைப் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதியான அபூ பாகிர் அல் சாதி கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


கடந்த மாதம் ஜோர்தானில் மூன்று அமெரிக்கப் படைகள் கொல்லப்பட்ட தாக்குதலை இவர் வழிநடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.


பரபரப்பான வீதியில் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அந்த வாகனம் தீயில் கருகி சிதைந்துள்ளது.


தனது படையினர் கொல்லப்பட்டதற்காக அமெரிக்கா கடந்த வார இறுதியில் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.