வர்த்தகம் பெண் தொழில்முனைவோர் விருது விழா!

 


இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய காப்புறுதி நிறுவனமாக LMD மற்றும் NielsenIQ இனால் கௌரவிக்கப்பட்டுள்ள AIA இன்சூரன்ஸ் நிறுவனம் எதிர்வரும் பெண் தொழில்முனைவோர் விருதான பிரதிபாபிஷேகாவிற்கு பிளாட்டினம் அனுசரணையாளராக பெண்கள் தொழில்துறை மற்றும் வர்த்தகச் சம்மேளனத்துடன் தனது மூலோபாயக் கூட்டாண்மையினை அறிவிப்புச் செய்வதில் பெருமையடைகின்றது.


இந்த முன்முயற்சியானது பணிச்சூழலில் பெண்களுக்கு சமமான வாய்ப்புக்களை நிலைநிறுத்துவதற்கும், வணிகத்தில் பெண்களை மேம்படுத்துவதற்கும் மற்றும் அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் AIA இன் உறுதிப்பாட்டை மிகவும் பிரதிபலிக்கின்றது.


பிளாட்டினம் அனுசரனையாளராக தனது உதவியினை விரிவுபடுத்துவதன் மூலம் பெண் தொழில்முனைவோர் விருதுகளின் நேர்மறையான விளைவை அதிகப்படுத்துவதற்கு நிறுவனம் தன்னை மிகவும் அர்ப்பணித்துள்ளது.


இந்த அனுசரனையானது பெண்களை வணிகத்தில் மேம்படுத்தும் முயற்சிகளுக்கு உதவுதல் மற்றும் பணிச்சூழலில் பெண்களுக்கு சமமான வாய்ப்புக்களை வழங்கி ஊக்குவித்தல் ஆகிய AIA இன் பெறுமதிகளுடன் தடையின்றி ஒத்துப் போகின்றது.


AIA இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சதுரி முனவீர இக்கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கருத்துத் தெரிவிக்கையில், ‘பெண்கள் தொழில்முனைவோர் விருதுகள் பிரதிபாபிஷேகாவிற்கு பிளாட்டினம் அனுசரணையாளராக பெண்கள் தொழில்துறை மற்றும் வர்த்தகச் சம்மேளனத்துடன் இணைந்து கொள்வதில் நாங்கள் மிகவும் பெருமை அடைகின்றோம்.


இந்த கூட்டாண்மை பெண் தொழில்முனைவோர் வணிக உலகில் செழிப்படைந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கக்கூடிய சூழலை வளர்ச்சியுறச் செய்யும் எங்களின் அர்ப்பணிப்பிற்குச் சான்று பயக்கின்றது. தொழில்முனைவில் பெண்களின் சாதனைகளை ஆதரிப்பதற்கும் அதனைக் கொண்டாடுவதற்கும் நாங்கள் மிகவும் உற்சாகமாகவே இருக்கின்றோம்’ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.