மஹிந்தவை போன்று எம்மை விலைக்கு வாங்க முடியாது !

 


தேசிய வளங்களை தாரைவார்ப்பதாக இந்தியாவிடம் குறிப்பிடவில்லை ; மஹிந்தவை போன்று எம்மை விலைக்கு வாங்க முடியாது - அநுரகுமார திசாநாயக்க

மஹிந்த ராஜபக்ஷவை விலைக்கு வாங்கியதை போன்று உலக நாடுகளால் எங்களை விலைக்கு வாங்க முடியாது.இந்திய விஜயத்தின் போது பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டன. நாட்டின் தேசிய வளங்களைத் தாரைவார்க்க ஒத்துழைப்பு வழங்குவதாக நாங்கள் குறிப்பிடவில்லை. காலவோட்டத்துக்கு பின்னர் உலகமும், அரசியலும் மாற்றமடைந்துள்ளது, ஆகவே நாங்களும் மாற்றமடைந்துள்ளோம் என்று இந்திய வெளியுறவு அமைச்சரிடம் குறிப்பிட்டோம் எனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


நாடு என்ற ரீதியில் தனித்துச் செயற்பட முடியாது,சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான வெளிவிவகார கொள்கையில் இருந்துக் கொண்டு நாங்கள் செயற்படுவோம் எனவும் குறிப்பிட்டார்.


அநுராதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.