சனியின் சஞ்சார பலன்!!
சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரித்து வரக்கூடிய நிலையில், சூரியனும் கும்ப ராசிக்கு இன்று (13.02.2024) பெயர்ச்சி ஆக உள்ளார்.
சூரியனின் வலிமையால் சனி அஸ்தமனம் ஆக உள்ளார்.
இதன் காரணமாக சில ராசிகளுக்கு கஷ்டத்தை தரக்கூடிய பலன்களை பெறுவார்கள்.
ஒரு சில குறிப்பிட்ட கிரகங்கள் சூரியன் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அருகில் வரும் போது அஸ்தமனம் அடைவது வழக்கம்.
அதாவது அந்த கிரகத்தின் முழு பலனை தர இயலாத நிலை உருவாகும்.
அந்த வகையில் கும்பத்தில் சஞ்சரிக்கும் சனிக்கு அருகில், சூரியன் சஞ்சரிக்கிறார்.
அதனால் கடந்த (11.02.2024) முதல் சனி அஸ்தமனம் அடைந்துள்ளார்.
மேலும் இன்றைய தினம் (13.02.2024) கும்பத்தில் சனியுடனே சேர்ந்து சஞ்சரிக்க உள்ளார்.
இதன் காரணமாக ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட ராசியினருக்கு சில பிரச்னைகளைத் தரக்கூடிய பலன்கள் அனுபவிக்க உள்ளனர். சனி சூரியனை விட்டு குறிபிட்ட கோணத்திலிருந்து விலகும், சனி உதயம் ஆகும் வரை அதாவது எதிர்வரும் (26.02.2024) வரை இந்த நற்பலன்கள் கிடைக்கும்.
சனி பகவானின் அஸ்தமனத்தால் உங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய காலம்.
உங்கள் குடும்பத்தில் கூடுதல் பொறுப்புகள் இருக்கும் என்பதால் அதை முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டியது இருக்கும்.
ரிஷபம்
சனி பகவானின் அஸ்தமனத்தால் உங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய காலம்.
உங்கள் குடும்பத்தில் கூடுதல் பொறுப்புகள் இருக்கும் என்பதால் அதை முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டியது இருக்கும்.
உங்க கர்ம ஸ்தானத்தில் சனி, சூரியனால் உங்களின் வேலைகளை சரியாக செய்து முடிக்க முயற்சி செய்யவும்.
கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. உங்கள் குடும்பம், பணியிட சூழ்நிலை பிரச்னை தரக்கூடியதாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சனி அஸ்தமம் நடப்பதால், உங்களின் வருமானம் மற்றும் ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்வது நல்லது.
உங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைகளை முடிப்பதில் கவனமும், நேர்மையுடனும் பணிபுரியவும்.
உங்களின் மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உங்கள் வேலைகளில் மன உளைச்சல் ஏற்படலாம்.
கன்னி
கன்னி ராசிக்கு ஆறாம் இடத்தில் சனியின் அஸ்தமனம் நடப்பதால், உங்கள் வாழ்க்கையில் எல்லா பக்கங்களிலிருந்து குழப்பங்கள் சந்திக்க நேரிடும்.
நீங்கள் செய்ய நினைக்கக்கூடிய முதலீடுகளில் கவனம் தேவை. இல்லையெனில் நிதி இழப்பு ஏற்படலாம்.
உங்களின் பணியிடத்தில் வேலையில் அதிருப்தி அடைய வாய்ப்புள்ளது. உங்கள் நிதி சார்ந்த விஷயத்தில் பண இழப்பு ஏற்படலாம்.
உங்களின் மனதிலிருந்து எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்கவும்.
தனுசு
சனி பகவான் அஸ்தமிக்கும் காலத்தில் உங்களுக்கு தனிப்பட்ட குடும்ப பொறுப்புகள், தொழில் ரீதியான விஷயங்களில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
உங்கள் வேலை, சொந்த வியாபாரத்தில் கவனம் செலுத்தவும்.
சக ஊழியர்களுடனான உறவில் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் நிதானம் தேவை.
உங்கள் நிதி நிலை சீராக இருக்க செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்கவும். கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை