இளைஞர் மீதான தாக்குதல் தொடர்பில் முறைப்பாடு!!

 


யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து அவரது வாக்குமூலம் நேற்று வியாழக்கிழமை (01)  பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

இதேவேளை சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற கட்டளையின் பேரில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபரது வாக்குமூலம் எம்மால் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று பதிவுசெய்யப்பட்டதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.