வீதியில் வழிமறித்து மோட்டார் சைக்கிள் திருட்டு!

 


யாழில் வீதியில் பயணித்த இளைஞனை தாக்கி , அவரது மோட்டார் சைக்கிளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி , யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் “வேகோ” ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை அரியாலை பகுதியில் வழிமறித்த கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியுள்ளது.

வன்முறை கும்பலின் தாக்குதலில் இருந்து தப்ப , மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு, இளைஞன் ஓடியுள்ளார். அதன் போது , தாக்குதலாளிகள் இளைஞனின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு , தப்பி சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த இளஞர் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.