பயங்கர காட்டுத்தீ – அவசர நிலை பிரகடனம்!
சிலி நாட்டில் வல்பரைசோ பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆயிரக்கணக்கான கட்டடங்கள், வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை முதல் காட்டுத் தீ பரவி வரும் நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு அவசர நிலையும் அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக், பிரகடனப்படுத்தியுள்ளார்.
சிலி வரலாறு காணாத அளவு காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. வல்பரைசோவில் மட்டும் சுமார் 7,000 ஹெக்டர் பரப்பளவுக்கு தீ பரவியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது
வல்பரைசோவுக்கு விடுமுறையை கழிக்க வந்த சுற்றுலா பயணிகள் பலர் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 1,400 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். ராணுவத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை