வாகன உதிரி பாகங்கள் நிலையத்தில் தீப்பரவல்!!

 


கொழும்பு - பஞ்சிகாவத்தை பகுதியில் உள்ள வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


நேற்றிரவு பரவிய தீயினால் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீயை கட்டுப்படுத்த 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.