இட்லி பிரை செய்முறை !


தேவையான பொருள்கள் -

இட்லி - 3

தக்காளி - 1

உப்பு - சிறிது

பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க -

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை -

இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். தக்காளியை மிக்சியில் கூழாக்கி கொள்ளவும் வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இட்லி துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு பொரித்து தனியே வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி கூழை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

பச்சை வாடை போனதும் மிளகாய் தூள், சிறிது உப்பு சேர்த்து கிளறி அதனுடன் பொரித்து வைத்திருக்கும் இட்லி துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான இட்லி பிரை ரெடி.

மாலை நேர ஸ்னாக்ஸ்ஆகவும் இரவு நேர டிபனாகவும் சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.