பொருளாதார மத்திய நிலையங்கள் இந்தியாவிடம்!!

 


நாட்டில் உள்ள 6 முக்கிய பொருளாதார மையங்களை இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த விடயம் குறித்து இன்று (2024.02.24) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தம்புள்ளை, தம்புத்தேகம, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, வெலிசறை, நாரஹேன்பிட்டி ஆகிய பொருளாதார நிலையங்களை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கத் தயாராகி வருவதாக தேசிய விவசாய சங்கம் சுட்டிகாட்டியுள்ளது.

இதேவேளை, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு தேவையான நிதி கிடைத்தவுடன் விவசாயிகளிடம் இருந்து உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (23) விவசாய தொழில்நுட்ப பூங்காவின் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.