ஹரிஹரனின் மாபெரும் இசை நிகழ்ச்சி நட்சத்திர பட்டாளத்துடன் முற்ற வெளியில்!
பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்குபற்றும் மாபெரும் இசை நிகழ்ச்சியுடனான நட்சத்திர கலை விழா, யாழ்ப்பாணம் - முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில், பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான ரம்பா, ஐஸ்வர்யா ராஜேஸ், யோகி பாபு உள்ளிட்ட மேலும் பல நட்சத்திரங்கள் பங்குபற்றவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக, VIP மற்றும் VVIPகளுக்கு மாத்திரம் அனுமதிக் கட்டணம் அறிவிடப்படுவதுடன், ஏனைய அனைவருக்கும் இலவசமாக கலந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை