கழிவுகளால் நிறைந்துள்ள கீரிமலை கடற்கரை!!


யாழ்ப்பாணம் கீரிமலை புனித தீர்த்த கரையோரத்தில் ஈமக் கிரியைக் கழிவுகள் பாரியளவில் கொட்டிக்கிடப்பதனால் அக் கடற்கரைப்பகுதி மிக மோசமாக அசுத்தமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகளுக்குப் பிரசித்தமான வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய தீர்த்தக்கரை அங்கு  கொட்டப்படும் ஈமக்கிரியைக் கழிவுகள் அகற்றப்படாமையால் அசுத்தமடைந்து காணப்படுகிறது. 

இதனால் இக்கடற்கரைப்பகுதி எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட முடியாத அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.