யாழ் வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!

 


யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை (09) மாலை இடம்பெறவுள்ள ஹரிஹரனின் இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பிரபலங்கள் குழுவொன்று இன்று (08) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக , நடிகர் சிவா , நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், பாடகி சுவேதா மேனன், நகைச்சுவை நடிகர் ரெடின் , விஜய் தொலைக்காட்சி பிரபலங்களான , பாலா , DD என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, மைனா உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

அவர்களை வரவேற்க பலரும் விமான நிலையத்தில் கூடி இருந்து மிக பெரிய வரவேற்பை அளித்தனர்.


நுழைவுச்சீட்டுகள் மூலம் கிடைக்கப்பெறும் நிதிகள் அனைத்தும் யாழ் கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு (YES- YARL EDUCATION SUPPORT FUND) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.