ஐக்கிய தேசிய கட்சியின் கதவுகள் சஜித் பிரேமதாசவிற்காக

 


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் கதவுகள் சஜித் பிரேமதாசவிற்காக தற்போது வரை திறந்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சகல முரண்பாடுகளையும் தவிர்த்து சஜித்துடன் சேர்ந்து செயற்பட தயாராக இருப்பதாவும் பாலித ரங்க பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தி தற்போது இராணுவத்தின் முகாமாக மாறியுள்ளதாகவும் பாலித ரங்க பண்டார குறிப்பிட்டுள்ளார்.


அண்மையில் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்திருந்தார்.


தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பொது மக்கள் கொள்கை வகுப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, சஜித் பிரேமதசவின் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து முக்கிய அரசியல் தலைவர்கள் வெளியேறி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்க்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.


இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தென்னிலங்கை அரசியல் அரங்களில் அதிரடி மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.


நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக் ரணவக்க, ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்ரமரட்ன, ஆகயோர் வெளியேறக் கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில் தென்னிலங்கையில் புதிய ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு இந்தியா காய் நகர்த்தல்களை மேற்கொண்டுவரும் நிலையில் தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.