ஆலயம் ஒன்றில் நடக்கும் அக்கிரமம்!

 


யாழ் கொக்குவில்   பகுதியில்  மிகவும் பிரபலமாக உள்ள பொற்பதிப்பிள்ளையார் கோவில் ஊர்மக்களுக்காக அல்லது கோவிலைப் பராமரிக்கும் ஐயர் குடும்பத்திற்கா சொந்தம் என்று தற்போது அடிபிடி நடக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐயர் தரப்பினர் கடந்த தைப்பூசத்திருநாளில் பிள்ளையார் கோவிலை கும்பாபிசேகம் செய்வதற்காக இடித்துள்ளார்கள் .

எனினும் வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்களின் பணத்தை குறியாகக் கொண்டு இவர்கள் கோயிலை இடித்து புதிதாக கட்டப்போகின்றோம் என கூறி பெருமளவு பணத்தை சுருட்ட நினைக்கின்றார்கள் என ஆலயத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் கூறுகின்றார்கள்.

எனினும் வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்களின் பணத்தை குறியாகக் கொண்டு இவர்கள் கோயிலை இடித்து புதிதாக கட்டப்போகின்றோம் என கூறி பெருமளவு பணத்தை சுருட்ட நினைக்கின்றார்கள் என ஆலயத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் கூறுகின்றார்கள்.
இந் நிலையில் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்  அங்கஜன் இராமநாதன் ஆலய விவகாரத்தில்  தலையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆலயம் என்பது அனைவரும் வந்து செல்லும் இடமாகும்.இவ்வாறான நிலையில் யாழில் உள்ள பிரபல ஆயங்களுக்கும் பூசகர்கள் அண்மைக்காலமாக உரிமை கொண்டாடி வருகின்றனர்.
பொற்பதிப்பிள்ளையார் ஆலயம் போன்று கடந்த காலங்களிலும் வேறு சில ஆலயங்களில் பூசகர்கள் அடாவடி தனங்களில் ஈடுபட்டு வந்தமையும், இதனால் குறித்த ஆலயத்திற்கு விசேட நாட்களில் சென்ற பக்தர்கள், ஆலயம் பூட்டப்பட்டிருந்ததனால் மனவேதனை அடைந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.      

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.