புதிய பொறிமுறையுடன் கட்டுநாயக்க விமான நிலையம்!!


கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.


ஜனாதிபதி அலுவலகத்தில் அமெரிக்க தூதுக்குழுவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது இதற்கான இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபர் ஆலோசகர், அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் தகவல்கள் இந்த அமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.


 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.