முன்னாள் காதலனை அழைத்து பெண் அரங்கேற்றிய சம்பவம்!
காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதியான நேற்றையதினம் பெண்ணொருவர் தன்னுடைய முன்னாள் காதலின் கால்களை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண் தனது கணவனை அழைத்து தனது முன்னாள் காதலனை நிர்வாணமாக்கி இரண்டு கால்களையும் துண்டித்ததாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தொடநடுவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காலி தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும் போது ஹிக்கடுவ களுபே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் காதல் உறவை வளர்த்துக் கொண்டுள்ளார்.
அதன் பின்னு தொழிற்கல்வியில் பட்டம் பெற்ற பிறகும் அவர்கள் சில காலம் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அப்பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்,
அவரது பழைய காதலரும் அவளுடன் உறவைப் பேணி வந்த நிலையில் பெண்ணுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வருவது பின்னாளில் தொல்லையாக மாறியுள்ளது.
அதேவேளை, தனது முன்னாள் காதலனிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை கணவனும் செவிமடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த அழைப்புகளை எப்படி நிறுத்துவது என்று அவரது கணவர் அறிவுறுத்தினார், அதன்படி தனது முன்னாள் காதலனின் தொலைபேசி அழைப்பிற்கு அன்பாக பதிலளித்தார்.
அதோடு சந்திப்பதற்காக முன்னாள் காதலனை தாடல்லா கடற்கரைக்கு வந்ததும் கணவர் குண்டாந்தடியால் அடித்து கால்களை உடைத்து நிர்வாணமாக்கிவிட்டார்.
சம்பவம் தொடர்பில் 32 வயதான ஒருவரே பாதிக்கப்பட்டு,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை