மலை ஏறாமல்
நேற்று (22) ராவணஎல்லையை பார்வையிட வந்த நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் இலக்கம் 172/4, மொரகல்ல, பேருவளையில் வசிக்கும் 32 வயதுடைய சந்தரதுர நாதிரா மதுசங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று (22) காலை மற்றுமொரு நண்பருடன் எல்ல மலைத்தொடரில் ஏறியதாகவும், மாலை 5:30 மணியளவில் அதிலிருந்து கீழே இறங்கச் சென்ற போது, பாறையில் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் வெள்ளவாய ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
சடலம் வெல்லவாய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை