நீர்மூழ்கி கப்பலை பார்வையிட ஜெர்மனி சென்ற இந்திய கடற்படை வல்லுநர்கள் குழு !

 


இந்திய கடற்படையின் கனவு திட்டங்களில் ஒன்றான P-75I (Project 75 India) எனப்படும் இந்தியாவிலேயே தொழில்நுட்ப பகிர்தல் மூலமாக நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் திட்டத்திற்கான நீர்மூழ்கி கப்பலை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக தற்போது இந்திய கடற்படையின் நீர்மூழ்கி வல்லுனர் குழு ஒன்று ஜெர்மனி இந்த திட்டத்திற்கு அளிக்க முன்வந்துள்ள U-212/214 ரக அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை பார்வையிட ஜெர்மனி சென்றுள்ளது அங்கு இந்த நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கு TKMS – ThyssenKrupp Marine Systems நிறுவனத்திற்கு சென்று தகவல்கறை அறிந்து ஆராய்ந்து பார்வையிட உள்ளதாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த P75I திட்டத்தின் மூலமாக இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவது தான் நோக்கமாகும், இந்த திட்டத்தில் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் நீர்மூழ்கி கப்பல் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து தேர்வு செய்யப்படும் நீர்மூழ்கி கப்பலை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பது பிரதான நிபந்தனை ஆகும்.



அந்த வகையில் ஜெர்மனியின் TKMS ThyssenKrupp Marine Systems இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ள Mazagon Docks Limited (MDL) எனப்படும் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆகியவை கைகோர்த்துள்ளன.


இந்த Type 212/214 நீர்மூழ்கி கப்பல்களில் ஒரு சிறப்பு உள்ளது அதாவது One and a Half hull முறையில் கட்டப்பட்டுள்ளது, குறிப்பாக Pressure Hull, நீர்மூழ்கியின் மையப்பகுதி ஆகியவை காந்த திறனற்ற ஸ்டீலை பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டவை ஆகும், இதனால் ஸ்டெல்த் திறன்கள் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் இவற்றில் AIP – Air Independent Propulsion எனப்படும் அமைப்பு உள்ளது இதன் காரணமாக கடலின் மேற்பரப்பிற்கு வந்து காற்றை உள்ளிழுத்து இயங்கும் அவசியம் வராது இதன் காரணமாக கடலுக்கடியிலேயே பல நாட்கள் தொடர்ந்து இயங்கும் ஆற்றலை இந்த நீர்மூழ்கி கப்பல் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதை போன்ற பல்வேறு கட்ட ஆய்வுகளின் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டு அவற்றை கொண்டு இறுதி அறிக்க தயாரிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஒரு நீர்மூழ்கி தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.