சட்டவிரோத பனை மரங்களை ஏற்றிய கப் வாகனம் மடக்கிப் பிடிப்பு .!
அனுமதியற்ற சட்ட விரோத பனைமரங்களை ஏத்திய கப் ரக வாகனத்தை யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று சனிக்கிழமை கைது செய்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் பனை மரங்களை கப் ரக வாகனத்தில் கடத்துவது தொடர்பில் பொலிஸ் புலனாய்வு குழுவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
குறித்த கப் ரக வாகனம் பாடசாலை நேரம் போலீசார் கடமையில் இருக்கும்போது நுட்பமான முறையில் சட்டவிரோதமான முறையில் பனை மரங்களை கடத்துவது தொடர்பில் புலனாய்வு செய்தி கிடைக்கப்பெற்றது.
என் நிலையில் கோப்பாய் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி ஒன்றில் பனை மரங்களை கடத்திய நிலையில் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் வாகனமும் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்
கருத்துகள் இல்லை