எனது சொல்லும் செயலும் ஒன்று -டக்ளஸ்!
எழுத்து மூலம் பெறத்தேவையில்லை எனது சொல்லும் செயலும் ஒன்று தான் என கேள்வி எழுப்பிய மீனவப் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கம் வழங்கியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ் இந்திய துணை தூதரகத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற இந்திய அத்துமீறிய கடற்தொழிலாளர்களை நிறுத்துமாறு கோரி இடம்பெற்ற உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு வருகைதந்த போது மீனவர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்த விடையம் அல்ல ஒரு இரவில் தீர்ப்பதற்கு .
இந்திய அத்துமீறிய மீன்பிடியை நிறுத்த வேண்டும் என்பதை எனது நிலைப்பாடு அதற்கான நடவடிக்கைகயே மேற்கொண்டு வருகிறேன் என்றார்.
இதன் போது கேள்வி எழுப்பிய மீனவர் ஒருவர் இந்தி மீனவர்கள் எல்லை தாண்டி வருவது தொடர்கிறது ஏன் அவர்களை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை.
அது மட்டுமல்லாது பருத்தித்துறை நீங்கள் கூறும் போது அத்துமீறிய இந்திய படகுகளை கரைக்கு பிடித்து வாருங்கள் எனக் கூறினீர்கள் எழுத்தில் தர ஏன் மறுக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் எனது செல்லும் செயலும் ஒன்றுதான் எழுத்தில் தர வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் கைது செய்து வாருங்கள் பிரச்சினை வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை