ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னேற்றம் கண்காணிக்கப்படும்!

 


அடுத்த ஆறு மாதங்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னேற்றம் கண்காணிக்கப்படும்!

 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் செயற்பாட்டு மற்றும் நிதி முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


தேசிய விமான சேவை வழங்கும் 510 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை உள்வாங்குவதன் மூலம் அரசாங்கம் தேவையான உதவிகளை வழங்கியுள்ளதால் முன்னேற்றம் காட்டப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அண்மைக்காலமாகக் கடுமையான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை மற்றும் அதன் செயற்பாட்டுச் சிக்கல்கள் என்பன பயணிகளுக்கு ஏற்பட்ட கடும் அசௌகரியங்கள் காரணமாகும்.


எவ்வாறாயினும், ஜனாதிபதியின் முன்மொழிவின் அடிப்படையில் நிதியமைச்சர் என்ற வகையில் விமான நிறுவனம் வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் இருந்து 510 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈடுகட்ட அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.


இதன்படி, கவர்ச்சிகரமான நிதி இருப்புநிலைக் குறிப்புடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த ஆறு மாதங்களில் மறுசீரமைப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.


விமான சேவையின் தேவையற்ற செலவுகள் குறைக்கப்பட வேண்டும். அதேவேளை அடுத்த 6 மாதங்களில் நிறுவனத்தில் நல்ல நிதி ஒழுக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


நிர்வாக அதிகாரிகளும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இணைந்து இந்தக் காரணத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கூறிய அமைச்சர், ஏறக்குறைய 6000 ஊழியர்களின் வேலைகளில் உறுதியற்ற தன்மை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (11) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.