நான் விமானியாக வரவேண்டும் ஆசையை வெளிப்படுத்திய மாணவி.!

 


நான் விமானியாக வரவேண்டும் ஆசையை வெளிப்படுத்திய மாணவி...பரிசளித்த விமானப்படைத் தளபதி உதேனி ராஜபக்ஷ.


இலங்கை விமானப் படையின் 73வது ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் கல்விக் கண்காட்சியும், விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்வுகளும் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.


அந்தவகையில் நேற்று வியாழக்கிழமை குறித்த கண்காட்சியை பார்வையிட்ட மாணவி ஒருவர் தனக்கு விமானி ஆக விருப்பம் உள்ளதாகவும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களிடம் கேட்டுள்ளார்.


இந்நிலையில் குறித்த மாணவிக்கு தேவையான ஆலோசனைகளையும் நினைவுச் சின்னம் ஒன்றினையும் இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் வழங்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.