யாழ் இந்துக்கல்லூரி அதிபருக்கு விசாரணை.!


யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் அங்கு கல்வி கற்கும் சில மாணவர்கள் அயல் பாடசாலை ஒன்றுக்கு மாணவர்களில் பெற்றோரை  சிரமதானத்துக்கு பாடசாலை வருமாறு அழைத்துள்ளார். 


குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது  யாழ் இந்துக் கல்லூரிக்கும்  கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான  துடுப்பாட்டப் போட்டி  யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.


பாடசாலையை உற்சாகப்படுத்தும் நோக்கில் சில மாணவர்கள்  பாண் வாத்தியத்தை இசைத்துள்ளனர்.


யாழ் இந்துக் கல்லூரியின் சிநேகித பெண் பாடசாலையான யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கு சென்ற சில மாணவர்கள் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பண்ட் வாத்தியம் இசைத்துள்ளனர்.


குறித்த பெண் பாடசாலையின் அதிபர் தனது பாடசாலைக்கு இடையூறு என போலீசாருக்கு முறைப்பாடு செய்யாத நிலையில் குறித்த ஆண்கள் பாடசாலையின் அதிபர் சம்பந்தப்பட்ட மாணவர்களை குறித்த பெண் பாடசாலையில் சிரமதானம் செய்ய செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளார்.


ஆனால் குறித்த பெண்பாடசாலை அதிபர் பாடசாலைக்குள் மாணவர்களை அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்ட நிலையில் பாடசாலை வீதியை மாணவர்கள் சிரமதானம் செய்தனர்.


இந்நிலையில் பொறுக்க முடியாத குறித்த ஆண் பாடசாலை அதிபர் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை அழைத்து தனது பாடசாலையை சுத்தம் செய்துள்ளார்.


குறித்த விடையாம் அறிவிக்கப்பட்டபோது அனேகமான மாணவர்களின் பெற்றோர் அரச மற்றும் தனியார் திணைக்களங்களில் பணிபுரியும் நிலையில் சில தாய்மார் கணவன்மார்களுக்கு தெரியாமல் பாடசாலைக்கு சென்று சிரமதானப் செய்துள்ளனர்.


குறித்த பாடசாலையை அதிபரின் செயற்பாடு பெற்றோர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்திய நிலையில் ஏற்கனவே குறித்த பாடசாலையில் சில மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என செய்திகள் வெளியாகிய நிலையில் மௌனமாக இருந்த நிலையில் ஒரு விளையாட்டு நிகழ்வுக்காக உற்சாகம் செய்யும் நோக்கில் பண்ட் வாத்தியம் இசைத்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் சிரமதானம் என்ற போர்வையில் பழிவாங்குவது ஏற்க முடியாது என தெரிவித்தனர்.


இன் நிலையில் குறித்த விவகாரம் வடமாகாண கல்வி அமைச்சின் கவனத்திற்கு சென்ற நிலையில் குறித்த விடையங்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.