ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல்!

 


பசிலின் முயற்சி தோல்வி, ரணில் விடாப்பிடி - ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல்


ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். 


காலியில் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை குறிப்பிட்டார். 


அரசியயலமைப்பிற்கு அமைவாக, ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கி முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டினார்.


இதனிடையே, ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என Daily Mirror பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.


திட்டமிட்டவாறு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தனக்கு நெருக்கமானவர்களிடமும் கடந்த இரண்டு அமைச்சரவைக் கூட்டங்களிலும் தனது கருத்துகளை தெரிவித்ததாக Daily Mirror செய்தி வெளியிட்டுள்ளது.


பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதியை இணங்க வைக்க பசில் ராஜபக்ஸ மேற்கொண்ட முயற்சிகளை தோல்வியடையச் செய்து, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.