வட கொரியாவை கண்காணிக்கும் நடவடிக்கையை தடுத்தது ரஷ்யா!




வட கொரியா மீதான சர்வதேச தடையை கண்காணிக்கும் ஐ.நா கண்காணிப்புக் குழுவை புதுப்பிப்பதற்கு எதிராக ரஷ்யா பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்கு ரஷ்யாவுக்கு வட கொரியா ஆயுதங்கள் வழங்குவதாக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் நாடுகள் குற்றம்சாட்டிய நிலையிலேயே ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் பலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் மீதான ஐ.நா தடை கடைப்பிடிக்கப்படுவது தொடர்பில் இந்தக் குழு சுமார் 20 ஆண்டுகளாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. ஆயுதப் பரிமாற்றங்கள் குறித்து இந்தக் குழு இந்த மாதத்தில் விசாரணைகளை நடத்தி வந்தது.


கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் சீனா வாக்களிப்பதை தவிர்த்துக் கொண்டதோடு ஐ.நா பாதுகாப்புச் சபையில் எஞ்சிய 13 அங்கத்துவ நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.