சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் செல்வி கிருஷ்ணராஜா செல்வி வழங்கப்படுகின்றது!.
ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடக மாணவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், இவ் ஆண்டு கிருஷ்ணராஜா செல்விக்கு வழங்கப்படுகிறது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் ஆண்டுதோறும் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும், யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ் ஆண்டு செல்வி கிருஷ்ணராஜா செல்வி வழங்கப்படுகின்றது.!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழா 14.03.2024, 15.03.2024 மற்றும் 16.03.2024 ஆகிய தினங்களில் நடைபெறுகின்றது.
14.03.2024 அன்று நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான இரத்தினபுரி மாவட்டத்தில் கொழும்புகாமம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த செல்வி கிருஷ்ணராஜா செல்விக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை