இலங்கையில் அவுஸ்திரேலிய எரிபொருள் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும்!


அவுஸ்தி ரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்து, இலங்கையில் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான திட்டங்களை தெளிவுப்படுத்தியுள்ளது.


இலங்கையின் பெற்றோலிய சில்லறை விற்பனை நடவடிக்கைகளுக்குள் நுழைவதற்கான ஒப்பந்தத்தில் அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம் கடந்த மாதம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் கைச்சாத்திட்டதை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட 150 எரிபொருள் நிலையங்கள் மூலம் சில்லறை விற்பனை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான அவர்களின் திட்டங்கள் மற்றும் அட்டவணை குறித்த புதுப்பிப்பை வழங்க அமைச்சிற்கு சென்றதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நைகல் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.


அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலிய நிறுவனம், இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BOI) ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும், இந்த ஆண்டு நடுப்பகுதியில் இயங்குவதற்கான உரிமத்தைப் பெறவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம், இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையை அதிக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டதன் பின்னர், நாட்டின் எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்க, அதன் வெளிநாட்டு இருப்புக்கள் பொருளாதார நெருக்கடியின் விளைவாக எண்ணெய் இறக்குமதியைத் தடுக்கின்ற

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.