ஜனநாயகப் போராட்டங்கள் தொடரும்!

 


தையிட்டி, மயிலத்தமடு,வெடுக்குநறி, போல அனைத்து இடங்களிலும்  நில ஆக்கிரமைப்பை தடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய தரப்பை சிறையில் அடைத்து விட்டால் இந்த நிலத்தை இலகுவில் கைப்பற்றி விடலாம் என நினைக்கின்றது சிங்கள பௌத்த பேதினவாதம்


 ஆனால் இங்கு அதிகாரத்துடன் இருக்கும் தலைவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி களத்தில் நிற்பதால் தாங்கள் செல்ல முடியாது என நொண்டிச் சாட்டுகளுடன் ஒதுங்கிக் கொள்கின்றனர் காரணம் அவர்கள் அரசுக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை


 எங்களிடம் அரசியல் அதிகாரம் இல்லை ஆனால் எமது சக்திக்கு மீறி நில ஆக்கிரமிப்பு மற்றும் தமிழ் தேசிய அழிப்புக்கு எதிராக எம்மை பணயம் வைத்து  நாங்கள் தொடர்ந்து போராடுவோம்


 ஜனநாயக ரீதியான எதிர்ப்புக்களுக்கும் போராட்டங்களுக்கும் நிச்சயமாக பெறுமதி உண்டு எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் #தமிழ் #தேசிய #மக்கள் #முன்னணி என்கின்ற அரசியல் இயக்கத்தை பலப்படுத்தினால் அரசியல் பிரதிநிதித்துவங்களை எமக்கு வழங்கினால் இந்த அரசுக்கு உச்சகட்ட நெருக்கடியை கொடுப்போம் என்பதனை உறுதியாக சொல்லுகின்றோம்


 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.