யாழ் மீசாலை விபத்து பாடசாலை மாணவன் பரிதாப மரணம்!
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் 01/03/2024 வெள்ளிக்கிழமை காலை 6மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய மாணவனை மோதியதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.விபத்திற்கு காரணமாக பேருந்து சாரதியை கைது செய்த சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதில் மீசாலை கிழக்கைச் சேர்ந்த 18வயதான சிவநாவலன் பரணிதரன் என்ற மாணவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


.jpeg
)





கருத்துகள் இல்லை