உலக நாடக தினத்தினை முன்னிட்டு மஹாகவி காளிதாஸர் எனும் நாடகம் மேடையேற்றப்படுகிறது.!


 உலக நாடக தினத்தினை முன்னிட்டு நாடக நெறியாளர் காளிதாஸ் அவர்களின் நெறியாள்கையில் மஹாகவி காளிதாஸர் எனும் நாடகம் மேடையேற்றப்படுகிறது.


உலக நாடக தினம் நாளை மறு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் இவ் நாடக தினத்தினை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள் ரீதியாகவும் நாடகக் கம்பனிகள் ரீதியாகவும் பல நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளதுடன் அதை ஒட்டிய பல நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. 


 அந்தவரிசையிலே இலங்கையின் பிரபல நாடக நெறியாளராக அறியப்படுபவரும் பல புரட்சிகர நாடக படைப்புக்கள் பலவற்றை இக் கலையுலகிற்கு ஈந்தளித்தருமாகிய முனியாண்டி காளிதாஸ் அவர்களது நெறியாழ்கையில் களரி கலை நிதியத்தின் தயாரிப்பிலே திருகோணமலை உவர்மலை தேசிய கல்லூரி அங்கில் மஹாகவி காளிதாஸர் எனும் நாடகம் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மேடையேற்றப்படுகிறது.


இவ் நாடக ஆற்றுகை பாடசாலை மாணவர்களின் காண்பியத்திற்காக எதிர்வரும் 27, 28ம் திகதிகளில் மதியம் 12.30 க்கும் பொதுமக்கள் கண்டுகளிப்பதற்காக எதிர்வரும் 27,28 ம் திகதிகளில் பிற்பகல் 5.30 மணிக்கும் ஆற்றுகை செய்யப்படவுள்ளது


உலக நாடக தினத்தை முன்னிட்டு களரி அரங்க கலை நிதியத்தின் தயாரிப்பில் காளிதாஸின் நெறியாள்கையில் பிரமாண்ட ஆற்றுகையாக மேடையேற்றப்படவுள்ள காளிதாஸர் நாடகத்தில் இலங்கையின் கிழக்கு வடக்கு மலையகம் என பல பிரதேச கலைஞர்கள் ஒன்றிணைந்து நடிக்கவுள்ளனர். பொது வெளியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மேடையேற்றப்படவுள்ள இப் படைப்பு வெற்றியடைய நாமும் வாழ்த்துகிறோம்


இவ் ஆற்றுகையினை கண்டுமகிழ உங்களையும் அழைத்து நிற்கிறோம் 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.