இறை மார்க்கமே இன்பத்தை தரும் போதைப் பொருட்கள் இன்பத்தை தராது.. பேராசிரியர் சிறீ சற்குணராஜா தெரிவிப்பு.!

இறைவனை அடைவதற்காக இறைவனை நோக்கி அருளப்பட்ட புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கு இன்பத்தை தரக்கூடியது என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குண ராஜா தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைக்கழக கைலாசபதிரங்கில் இடம்பெற்ற இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் பண்பாட்டு எனும் தொனிப்பொருளில் இரண்டாவது சர்வதேச இந்து மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இறை வழிபாட்டின் ஈடுபாட்டு அற்ற தன்மை அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் இவ்வாறான மாநாடுகளை நடாத்துவது காலத்தின் தேவையாக காணப்படுகிறது.

ஒரு மனிதன் தான் விரும்பிய  சமயத்தை பின்பற்றுவனாக இருக்கலாம் அவனது சமயம் கூறுகின்ற வாழ்வியல் ஒழுக்கங்களை சரிவர பின்பற்றுவானாயின் அவனது வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஆனால் தற்போதைய இளைஞர் மத்தியில் போதைப் பொருட்கள் மூலம் ஏதோ  இன்பம் கிடைக்கிறது என்ற மனோநிலை இளம் சமூகம் வழி தவறிச் செல்வதற்கு பிரதான காரணமாக அமைந்திருக்கிறது.

திருக்குறள் உலக பொது மறையாக இருந்தாலும் எமது சமயத்தை பொறத்தவரையில் திருமூலர் திருமந்திரம் பல வாழ்வியல் தத்துவங்களை போதித்து வருகிறது.

மருத்துவம் கல்வி அறிவியல் விஞ்ஞானம் சாத்திரம் மற்றும் வாழ்வியல் கலைகள் பலவற்றை உள்ளடக்கிய திருமந்திரம் மனித வாழ்வுக்கு வழிகாட்டும் மருந்தாக விளங்குகிறது

பகவத் கீதை  அத்தியாயம் ஒன்பது வாழ்வியல் தத்துவங்களை குறிப்பிடுவதோடு உன்னிடன் இல்லாதது எதுவோ அதைத் தேடு என்கிறது சுவாமி விவேகானந்தர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது படிக்காத பூசாரியான இராமகிருஷ்ணரிடம் ஞானத்தை பெறுவதற்காக இறைவன் அனுப்புகிறார். 

இராமகிருஷ்ணரிடம் ஞானத்தை பெற்றுக் கொண்ட விவேகானந்தர் அமெரிக்க  நூலகத்தில் இருக்கின்ற புத்தகங்களின் பக்கங்களில் உள்ளவற்றை பாராது கேட்கும் கேள்விகளுக்கு தனது ஞான திறமையினால் பதிலளித்தார்.

ஆகவே சமுதாயத்தை சிறந்த முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இது போன்ற மாநாடுகள் காலத்தின் தேவையாக உள்ள நிலையில் அதன் தனித்துவத்தை உணர்ந்து சமூகத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.75

இறை மார்க்கமே இன்பத்தை தரும்

போதைப் பொருட்கள் இன்பத்தை தராது.. பேராசிரியர் சிறீ சற்குணராஜா தெரிவிப்பு.

இறைவனை அடைவதற்காக இறைவனை நோக்கி அருளப்பட்ட புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கு இன்பத்தை தரக்கூடியது என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குண ராஜா தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைக்கழக கைலாசபதிரங்கில் இடம்பெற்ற இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் பண்பாட்டு எனும் தொனிப்பொருளில் இரண்டாவது சர்வதேச இந்து மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இறை வழிபாட்டின் ஈடுபாட்டு அற்ற தன்மை அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் இவ்வாறான மாநாடுகளை நடாத்துவது காலத்தின் தேவையாக காணப்படுகிறது.

ஒரு மனிதன் தான் விரும்பிய  சமயத்தை பின்பற்றுவனாக இருக்கலாம் அவனது சமயம் கூறுகின்ற வாழ்வியல் ஒழுக்கங்களை சரிவர பின்பற்றுவானாயின் அவனது வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஆனால் தற்போதைய இளைஞர் மத்தியில் போதைப் பொருட்கள் மூலம் ஏதோ  இன்பம் கிடைக்கிறது என்ற மனோநிலை இளம் சமூகம் வழி தவறிச் செல்வதற்கு பிரதான காரணமாக அமைந்திருக்கிறது.

திருக்குறள் உலக பொது மறையாக இருந்தாலும் எமது சமயத்தை பொறத்தவரையில் திருமூலர் திருமந்திரம் பல வாழ்வியல் தத்துவங்களை போதித்து வருகிறது.

மருத்துவம் கல்வி அறிவியல் விஞ்ஞானம் சாத்திரம் மற்றும் வாழ்வியல் கலைகள் பலவற்றை உள்ளடக்கிய திருமந்திரம் மனித வாழ்வுக்கு வழிகாட்டும் மருந்தாக விளங்குகிறது

பகவத் கீதை  அத்தியாயம் ஒன்பது வாழ்வியல் தத்துவங்களை குறிப்பிடுவதோடு உன்னிடன் இல்லாதது எதுவோ அதைத் தேடு என்கிறது சுவாமி விவேகானந்தர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது படிக்காத பூசாரியான இராமகிருஷ்ணரிடம் ஞானத்தை பெறுவதற்காக இறைவன் அனுப்புகிறார். 

இராமகிருஷ்ணரிடம் ஞானத்தை பெற்றுக் கொண்ட விவேகானந்தர் அமெரிக்க  நூலகத்தில் இருக்கின்ற புத்தகங்களின் பக்கங்களில் உள்ளவற்றை பாராது கேட்கும் கேள்விகளுக்கு தனது ஞான திறமையினால் பதிலளித்தார்.

ஆகவே சமுதாயத்தை சிறந்த முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இது போன்ற மாநாடுகள் காலத்தின் தேவையாக உள்ள நிலையில் அதன் தனித்துவத்தை உணர்ந்து சமூகத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.