நாணையத் தாள்களை சேதப்படுத்தினால் 3 வருட சிறை!

 


நாணையத் தாள்களை சேதப்படுத்தினால் 3 வருட சிறையுடன் கோடிக்கணக்கில் அபராதம் - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு


இலங்கையின் நாணயத்தாளை வேண்டுமென்றே வெட்டுதல், துளையிடுதல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாணயத் தாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.


அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அல்லது அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.


நாட்டில் நாணயத்தாள்களை உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை தயாரிப்பதற்கு நாணயத்தாள்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.


அத்துடன் நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்களுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.