புத்ளத்தில் இடம்பெற்ற விபத்து!!

 


லொறியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 புத்தளம் - கொட்டுக்கச்சிய, கல்லகுளம் பகுதியில் நேற்று (22) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.


 ஆனமடுவ, வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.குசுமலதா மல்காந்தி (வயது 43) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர்.


 புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக தனது மூன்று பிள்ளைகளுடன் சென்று பின், ஆனமடுவ வேம்புவெவ கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஆனமடுவையில் இருந்து வந்த தனியார் வர்த்தக நிறுவனமொன்றுக்கு சொந்தமான லொறி மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.