வேலை இழக்கும் 6,000 ஊழியர்கள்!!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த ஆறு மாதங்களுக்குள் முன்னேற்றத்தை காட்ட முடியாவிட்டால் 6,000 ஊழியர்களின் வேலைகள் நிச்சயமற்றதாக இருக்கும் என கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் இன்று (12) காலை அவரது அலுவலகத்தில் நிறுவன நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கையில் ,
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அவ்வப்போது தனது செயற்பாடுகளில் தொடர்ச்சியான தாமதங்கள் காரணமாக குற்றம் சுமத்தப்பட்டதுடன் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
விமானத்தின் தாமதம் சமீபகாலமாக பயணிகளுக்கு எரிச்சலையும், சிரமத்தையும் ஏற்படுத்தியது. அதேவேளை விமான சேவையை தொடர்ந்தும் நடத்துவதற்கு பல வர்த்தக வங்கிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெற்ற 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 510 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டி சில்வா தெரிவித்தார்.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விமான சேவையின் தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும், ஆறு மாதங்களில் சிறந்த நிதி ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நிறுவன நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் இந்த முயற்சியில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
16 விமானங்கள் தற்போது இயக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் ஆறு நீண்ட தூரம் மற்றும் 29 குறுகிய தூர விமானங்கள் இயக்கப்படுவதாகவும் கல்லந்துரையாடலில் கலந்துகொண்ட நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த நடவடிக்கைகளுக்காக பெல்ஜியத்திலிருந்து மூன்று விமானங்களும், ஃபிட் ஏர் நிறுவனத்திடம் இருந்து மற்றொன்றும் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை