798 பேர் அதிரடியாக கைது!
நாடளாவிய ரீதியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 13 பெண்கள் உட்பட 798 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களுள் , 43 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு , 14 சந்தேக நபர்களின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவர்களில் போதைப்பொருளுக்கு அடிமையான 11 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 510 சோதனை நடவடிக்கைகளில் 6 பெண்கள் உட்பட 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 182 கிராம் ஹெரோயின், 148 கிராம் ஐஸ் , 307 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 66 சோதனை நடவடிக்கைகளில் பெண் உட்பட 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இதன்போது, 30 கிராம் ஹெரோயின் மற்றும் 302 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை