மனைவியை தாக்கிய கணவர் கைது!

 


வத்தளை பிரதேசத்தில் உள்ள வைத்திய பரிசோதனை நிலையமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த மனைவியை கத்தரிக்கோலால் தாக்கி காயப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு காயமடைந்தவர் நுவரெலியா , மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணாவார்.


இவர் நேற்று (15) காலை வத்தளை பிரதேசத்தில் உள்ள வைத்திய பரிசோதனை நிலையமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற கணவர் , இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் எல்லை மீறியதில் சந்தேக நபரான கணவர் அருகில் இருந்த கத்தரிக்கோலால் மனைவியின் கழுத்தில் பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


காயமடைந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதனையடுத்து சந்தேக நபரான கணவர் வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.