பீட்ரூட் இன் நன்மை தீமை!!

 


பொதுவாக பீட்ரூட்டில் பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி6, வைட்டமின் பி9, வைட்டமின் சி, பீடைன் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இது ரத்த சோகை பிரச்சனை, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இவ்வளவு நன்மைகள் நிறைந்த பீட்ரூட்டில் ஒரு சில பக்கவிளைவுகளும் உண்டு.

அதிக ரத்த அழுத்தம் கொண்டவர்கள் பீட்ரூட்டை சாப்பிட்டால் அவர்களுக்கு அது நன்மை பயக்கும். ஆனால் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். ஏனென்றால் இவர்கள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது ரத்த அழுத்தத்தை இன்னும் குறைக்கிறது. எனவே குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் டயட்டில் இருந்து பீட்ரூட்டை விலக்கி வைக்க வேண்டும்.

உடல் உள்ளுறுப்புகளில் கல் இருக்கும் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்ள கூடாது. பித்தப்பை அல்லது சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பீட்ரூட்டில் ஆக்சலேட்டின் அளவு அதிகமாக இருப்பதால் சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளில் காணப்படும் கற்கள் பிரச்சனையை அதிகரிக்க செய்யும்.

நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது பிரச்சனையை அதிகரிக்க செய்யும். பீட்ரூட்டில் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளதால் இதை சாப்பிடுபவர்களின் உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிட விரும்பினால் தங்கள் நிலைமைக்கேற்ப மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவதா அல்லது வேண்டாமா என்பது தீர்மானித்து கொள்ளலாம்.




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.