மருத்துவமனையின் இளம் மருத்துவர் தற்கொலை

 


கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த வைத்தியர் இன்று (03) காலை அவரது வீட்டில் விஷம் அருந்தி உயிரிழந்த சடலமாக மீட்கப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.


காலி, படகன்வில பிரதேசத்தில் வசிக்கும் கராப்பிட்டிய வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணிபுரியும் 37 வயதுடைய வைத்தியரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


குறித்த மருத்துவர் வீட்டில் தனியாக இருந்தபோது, விஷம் அருந்தி உயிரிழந்துள்ள நிலையில் கிடப்பதைக் கண்ட அவரது மனைவி பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.


பிரேத பரிசோதனை இன்று கராபிட்டிய வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது. காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.