தமிழ் அருள் இணையத்தள வாசகர்களுக்கு ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!


ஈஸ்டர் திருநாளில் இயேசுவின் உயிர்தெழுதலை கொண்டாடும் நாம். அவர் நமக்கு போதித்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு அளிப்போம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.


உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் திருநாளும் ஒன்று. இந்த திருநாளுக்காக கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் அனுஷ்டிப்பார்கள். மக்களுக்காக உயிர் விட்ட இயேசுவின் உயிர்த்தெழுதலை கொண்டாடுவதற்காக காத்திருப்பார்கள். 


கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு வரலாற்று நிகழ்வாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு கொடுத்ததற்காக, நீதியை நிலைநாட்ட தூண்டியதற்காக, ஏழைகளை வாழவைத்ததற்காக, பாவிகளை மன்னித்ததற்காக, பிணிகளை போக்கியதற்காக, உண்மைகளை பேசியதற்காக இயேசு கொல்லப்பட்டார். 


அநீதியின், பாவத்தின் சக்திகள் அனைத்தும் சேர்ந்து அவரைக் கொலைக்குட்படுத்தின. ஆனால் இறந்து அடக்கம் செய்யப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார். இறந்த மூன்றாம் நாள் வெற்றி வீரராய்க் கல்லறையில் இருந்து உயிரோடு வெளியே வந்தார். இன்றும் நம் ஆன்மாவில் கலந்து நம்மோடு இருக்கிறார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.