கண்களைத் தானம் செய்த நடிகர் டேனியல் பாலாஜி!!
தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. மாரடைப்பு காரணமாக பிரபல நடிகர் டேனியல் பாலாஜி நேற்று (மார்ச் 29) இரவு காலமானார்.
அவருக்கு வயது 48. டேனியல் பாலாஜி , சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற பொலிஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்து அதீத கவனம் ஈர்த்தார்.
அதுமட்டுமல்லாது இளைய தளபதி விஜய் இன் பைரவா திரைப்படத்திலும் வில்லன் வேடத்தில் கலக்கி இருந்தார். அவரது மறைவு திரை உலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை