ஹோட்டலில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!

 


நுவரெலியாவில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றின் சமையலறை பகுதியில் ஏற்பட்ட தீயினால் சமையலறை பகுதி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்றையதினம் (31-03-2024) இடம்பெற்றுள்ளது.

இந்த தீப்பரவலுக்கான காரணம் சமையல் எரிவாயு கசிவு என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தீ பரவிய சில நிமிடங்களில் நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், உடைமைகளுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.