இந்திய நபரின் வியக்கவைக்கும் செயல்!!

 


இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அலுவலகப் பணியாளர் ஒருவர், 26 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்ததற்காக 'India Book of Records’ சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

துவரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ( Dwarikesh Sugar Industries Ltd) நிறுவனத்தில் எழுத்தாளராக பணியாற்றும் தேஜ்பால் சிங் என்பவர் தான் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

இவர் விடுமுறை எடுக்காதது மட்டுமல்லாது ஞாயிற்றுக் கிழமைகள், பண்டிகை தினங்கள் மற்றும் அலுவலகம் விடுமுறையின் போதும் பணியாற்றியுள்ளார்.

நிறுவனத்தில்   1995 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி முதல் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2003 ஆம் ஆண்டில் ஒரே ஒரு நாள் மட்டும் தனது சகோதரனின் திருமணத்திற்காக விடுமுறை எடுத்துள்ளார்.

ஆண்டுதோறும் 45 நாட்கள் விடுமுறையை நிறுவனம் அளித்தாலும் இவர் ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளார்.

அதேவேளை மனைவி, இரண்டு தம்பிகள் மற்றும் நான்கு குழந்தைகள் என பெரிய குடும்பத்துடன் வாழ்ந்து வரும் தேஜ்பால் சிங், ஒரு நாள் கூட அலுவலகத்திற்கு தாமதமாக சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.