ஆரோக்கியம் தரும் வேர்கடலை!!

 


வேர்க்கடலை நம்மை பொறுத்தவரை ஒரு சிறந்த சிற்றுண்டி. சிலர் வேகவைத்து, சிலர் வறுத்து, சிலர் கடலை மிட்டாயாக என பல்வேறு வடிவங்களில் எடுத்துக் கொள்வார்கள். மேலும் நாம் அடிக்கடி சாப்பிடும் மிக்சர் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களிலும் வேர்க்கடலை சேர்க்கப்படுகிறது.


இவை எளிதாக கிடைக்கக் கூடியது, விலை மலிவானது, ஆனால் ஆரோக்கியத்தில் அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் பருப்புகளைப் போல் சக்திவாய்ந்தவை. இத்தகைய வேர்க்கடலையின் நன்மைகளை இப்போது பார்ப்போம்.

வேர்க்கடலையை, எண்ணெயில் வறுத்து சாப்பிடுவதற்கு பதிலாக, ஊற வைத்த வேர்கடலை எண்ணற்ற நன்மைகளை செய்யும். ஊட்டச்சத்து பலன் முழுமையாக கிடைக்கும். இதன் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உடலில் உறிஞ்சப்படுகின்றன.

வேர்க்கடலையில், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும், வைட்டமின் ஈ, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் பி, பொட்டாசியம், மெக்னீசியம் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.